Total Pageviews
Saturday, 22 March 2014
களக்காடு வனவிலங்கு சரணாலயம்: திருநெல்வேலி
தமிழ்நாட்டில் உள்ள களக்காடு திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி “களக்காடு” என்று பெயர் பெற்றது. இங்குள்ள வனவிலங்கு சரணாலயம் சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. குற்றாலத்துக்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. இது தமிழகத்தின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும்.
இக்காப்பகத்தின் வடக்கு,தெற்கு,மேற்கு திசைப்பகுதிகள் வனங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் கிழக்குப் பகுதியில் மட்டும் கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராம வனப்பாதுகாப்பு (Village Forest Protection Committees) குழுக்கள் உருவாக்கப்பட்டு, கட்டுப்பாடான வனமேலாண்மை செயற்படுத்தப்படுகிறது.
இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி புள்ளிமான், கடம்பை மான்கள், காட்டுப்பன்றிகள் சிங்கவால் குரங்குகள் மிகுதியாக வாழ்கின்றன.இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் பாபநாசம்ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி நதியும் அதன் சில உப நதிகளும் இந்த சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன.
இதில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளைக் காப்பகத்தில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம், கடந்த 1995-ஆம் ஆண்டு உலக வங்கியினால் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக, இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில்(the ‘Best coexistence and buffer zone management’) முக்கிய பணியாற்றியதற்காக, இக்காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் (National Tiger Conservation Authority (NTCA)) சிறந்த விருது கிடைத்துள்ளது.
குறிச்சொற்கள் : sathiyam tv, களக்காடு, திருநெல்வேலி, புலிகள் காப்பகம், வனவிலங்கு சரணாலயம்
Wednesday, 6 November 2013
களக்காடு
அமைவிடம்
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 27 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
களக்காடு (ஆங்கிலம்:Kalakkad), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம்
1 மக்கள் வகைப்பாடு
2 தல வரலாறு
3 சிறப்புக்கள்
4 அமைவிடம்
5 ஆதாரங்கள்
6 இவற்றையும் காணவும்
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,025 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். களக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. களக்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இங்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் செங்கத்தேரி அருவி உள்ளது. உலகப்புகழ் பெற்ற புலிகள் புகலிடம் உள்ளது. பழமையான சிவன் கோவிலும் உண்டு.
இறைவர் திருப்பெயர் : சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார். இறைவியார் திருப்பெயர் : கோமதியம்பாள், ஆவுடைநாயகி. தல மரம் : புன்னை. தீர்த்தம் : பச்சையாறு, சத்திய தீர்த்தம். வழிபட்டோர் : தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன். வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).
தல வரலாறு
தற்போது 'களக்காடு' என்று வழங்குகிறது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்று வழங்கப் பெற்றது. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதைய மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு. ஒருமுறை, காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய, சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர், பொய்யாமொழியார்" என்றும், இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும், இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது.
சிறப்புக்கள்
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். ராஜ கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது - 156 அடி உயரம். மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும் இசைத் தூண்களும் அமைந்து உள்ளன. 21 கதிர்கள் உள்ள தூண்களில் தட்டினால் மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாகின்றன. திருப்பெருந்துறையில் உள்ளது போலவே, 32 கொடுங்கைகள் உள்ளன. இத்தலதிற்கு சோராரணியமென்றும், புன்னைவனமென்றும் பெயர்களுண்டு. சுவாமிக்கு 1. புன்னைவனநாதர், 2. பிரமநாயகன், 3. பரிதிநாயகன், 4. சுந்தரலிங்கம், 5. களந்தை லிங்கம், 6. பைரவ லிங்கம், 7. வீரமார்த்தாண்ட லிங்கம், 8. திரிபுரஹரன், 9. வைரவநாதர், 10. சாமள மகாலிங்கர், 11. சோம நாயகர், 12. குலசை நாயகர் முதலிய பெயர்களும் வழங்குகின்றன. கோயிலின் முன் வாயிலில் இக்கோயில் திருப்பணி செய்த வீரமார்த்தாண்டவர்மனும், சுந்தரரும், சேரமானும் இருபுறமும் உள்ளனர். மார்ச்சு மாதம் 20, 21, 22 ஆகிய நாள்களிலும், செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாள்களிலும் சூரியனின் கதிர்கள் சுவாமி மீது படும் அற்புதக் காட்சி கண்டு மகிழத்தக்கது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு திருநெல்வேலியிலிருந்து (பாளையங்கோட்டை வழியாக) நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவு களக்காடு.
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம்
ஆதாரங்கள்
Jump up ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
Jump up ↑ http://www.tn.gov.in/gov_cm.html
Jump up ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
இவற்றையும் காணவும்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
[மறை]
பா • உ • தொ
திருநெல்வேலி மாவட்டம்
மாவட்டத் தலைநகரம்
திருநெல்வேலி
வட்டங்கள்
திருநெல்வேலி · ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · சங்கரன்கோயில் · செங்கோட்டை · சிவகிரி · தென்காசி · வீரகேரளம்புதூர்
ஊராட்சி ஒன்றியங்கள்
ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · கடையநல்லூர் · கடையம் · களக்காடு · கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் · செங்கோட்டை · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · தென்காசி . வள்ளியூர் . வாசுதேவநல்லூர் . ராதாபுரம் . நாங்குநேரி
மாநகராட்சி
திருநெல்வேலி
நகராட்சி
சங்கரன்கோவில் · தென்காசி · கடையநல்லூர் · செங்கோட்டை · புளியங்குடி · அம்பாசமுத்திரம் · விக்கிரமசிங்கபுரம்
பேரூராட்சிகள்
அச்சம்புதூர் · ஆலங்குளம் · ஆழ்வார்குறிச்சி · ஆய்குடி · சேரன்மகாதேவி · குற்றாலம் · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · இலஞ்சி · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · கீழப்பாவூர் · மணிமுத்தாறு · மேலகரம் · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி·பண்பொழி · பத்தமடை · புததூர் · இராயகிரி · சம்பவர் வடகரை · சங்கர் நகர் · சிவகிரி · சுந்தரபாண்டிபுரம் · சுரண்டை · திருக்கருங்குடி · திருவேங்கடம் · திசையன்விளை · வடகரை · வடக்குவள்ளியூர் · வாசுதேவநல்லூர் ·
வீரவநல்லூர்
ஆறுகள்
தாமிரபரணி ·
சிற்றாறு · கொறையாறு · வேளாறு · கடநா நதி · எலுமிச்சையாறு · பச்சையாறு · நம்பியாறு · வேனாறு ·
வெட்டாறு
Monday, 3 December 2012
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
களக்காடு, டிச. 19:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற்றில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். கடந்த மாதம் பெய்த கனமழை யால் தலையணை பச்சையாற்றில் வெள்ளம் பாய்ந்தோடியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் தலையணை செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்ததால் ஒரு வாரமாக வெள்ளம் தணியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந் தது.
கடந்த வாரம் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே கடந்த இரு நாட்களாக செங்கல்தேரி, குளிராட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைதொடர்ந்து தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
விடுமுறை தினமான நேற்று வெளியூர் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் ஏராளமா னோர் தலையணைக்கு வந்தனர். அவர்கள் பச்சையாற்றில் உற்சாகமாக குளித்தனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல கருங்கல்கசம், கோழிக்கால், நெட்டேரியங்கால், குளிராட்டி, செங்கல்தேரி பகுதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் களக் காடு ஊர்பகுதியில் மழை பெய்யவில்லை.
சுற்றுலா பயணிகள் உற்சாகம்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
Friday, 23 November 2012
பல் போச்சே ........
தென் தமிழகத்தின் கோடியில் உள்ள பொதிகை மலை பல அதிசியங்களையும் ரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
தென்காசிக்கு அருகில் உள்ள குற்றாலத்திலிருந்து, மணிமுத்தாறு பாபனாசம் மற்றும் காரையாறு அதற்கும் மேலே அகஸ்த்தியர் அருவி மற்றும் பாணதீர்த்தம் போன்ற இடங்கள் இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில் அமைந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம்-வள்ளியூர் பாதையில் அமைந்துள்ளது களக்காடு என்னும் சிற்றூர்.அங்குள்ள மலை அரிய பல மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மலையில் 5கி.மீ. தொலைவில் கற்கண்டாக இனிக்கும் அருவியும் அருகில் பல ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவிலும் உள்ளது.
கோவிலை ஒட்டி ஒரு பெரிய்ய மண்டபமும் உள்ளது. அருவிக்கரை எங்கும் அழகிய பலவண்ண பூச்செடிகளும் கண்களைக் கவரும்.
பெருமாள் கோவிலுக்கு தினமும் அடிவாரத்தில் உள்ள ஊரில் இருந்து ஒரு அர்ச்சகர் காலையில் வந்து பூஜை செய்துவிட்டு திரும்பிவிடுவார். பெருமாள்சிலை சுமார் 6அடி உயரம் கம்பீரமாக இருக்கும்.
மலையில் கரடுமுரடான பாதையை நடந்து தான் கடக்கவேண்டும்.வழி நெடுகிலும் பெரிய பெரிய காட்டு மரங்களும் மரங்களில் அரியவகை சிங்கவால் குரங்குகளும் உள்ளன.
திருமணத்திற்கு முன் என் கணவர் அவர் நண்பர்களுடன் (சுமார் 25 நபர்கள்) மற்றும் சமையல் பொருட்கள் சமையல் காரருடன் வருடம் ஒரு முறை அங்கு வெளிஉலக தொடர்பு ஏதுமின்றி ( 1969-அப்போது கைபேசியும் கிடையாது) மூன்று தினங்களை இயற்கையுடன் ஒன்றி ரம்மியமாக கழித்தும் அருவியில் நீராடி மகிழ்ந்ததையும், ஒரு முறை அவர் நண்பர் ஒருவர்க்கு அருவியில் ஏற்பட்ட அனுபவத்தையும் கூறினார்.
"அருவி, கரையிலிருந்து 15அடி தொலைவில் ஆழமான தடாகத்தில் உள்ளது.அருவிக்கு கீழே அமர்ந்து குளிக்க ஒரு பெரிய பாறை உள்ளது. தண்னீர் பளிங்குபோல் தெளிவாகவும், கற்கண்டு போல் சுவையாகவும் இருக்கும்.
. மண்டபம்,கோவில் எங்கேயும் மின்வசதி கிடையாது. இரவில் " பெட்றமாக்ஸ்" உதவியில் சமையல் நடைபெறும். அனைவரும் மண்டபத்தில் படுத்துக்கொள்ள, இருவர் மட்டும் வெளியில் மரச்சுள்ளிகளை எரியவிட்டு, காட்டுவிலங்குகள் அருகே வராமல் காவல் இருப்பார்கள்.
பாறையில் அமர்ந்து சிலரும் கரையில் சிலரும் அருவித்தண்ணீரில் நீராடிக்கொண்டு இருக்கும் போது ஒரு நண்பர் அருவியில் நீரோடு வந்த சிறிய இலையுடன் கூடிய குச்சியை பல் தேய்க்க வசதியாக உடைத்து, பல் தேய்த்திருக்கிறார். சிறிது நேரம் தேய்த்துவிட்டு குச்சியை அருவியில் வீசிவிட்டு அனைவருடன் அருவியில் குளித்துக்கொண்டிருக்கும்போது, சிறிது நேரம் கழித்து வாய் உணர்ச்சி இல்லாமல் மரத்துவிட்டது போல இருக்கிறது என்று சொல்லி வாய் நிறைய நீரால் கொப்பளிக்கும் போது அத்தனை பற்களும் அருவியில் கொட்டிவிட்டது! அதில் இரண்டு பற்களை ஏற்கனவே எடுக்கவேண்டும் என கூறிக்கொண்டிருந்தார்.அதுவும் சேர்ந்து அருவியோடு போய்விட்டது! அவர் பல் தேய்த்த குச்சியை அருவியில் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை
ஆம்! தென் தமிழகத்தின் பொதிகை மலைத்தொடர் அரிய பலமூலிகைகளையும் அதிசியங்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஜும்மா பயான்-களக்காடு
Thursday, 22 November 2012
களக்காட்டில் கோவிலுக்குள் புகுந்த கருநாகப் பாம்பு: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
களக்காடு மேலபத்தை ரோட்டில் கற்பகவள்ளியம்மன் கோவில் உள்ளது. நேற்று மாலை இங்கு கருநாகபாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த பக்தர்கள் கோவிலில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியே சென்றனர்.
இதையடுத்து கோவில் பூசாரி சுரேஷ் களக்காடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை துணை இயக்குனர் சேகர் உத்தரவின்பேரில் வனத்துறை ஊழியர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் நவீன உபகரணங்களை பயன்படுத்தி பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை களக்காடு தலையனை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கருநாகப்பாம்புகள் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும். தற்போது பிடிக்கப்பட்டுள்ள கருநாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கோவில் அருகே உள்ள புதரில் பதுங்கியிருந்திருக்கலாம். நேற்று புதரில் இருந்து வெளியேறி கோவிலுக்குள் புகுந்திருக்கலாம் என்றனர்.
அலி டிராகன் ரியூ : ALI DRAGON RYU
Subscribe to:
Posts (Atom)