Total Pageviews

Thursday, 22 November 2012

களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு யானைகள், சிறுத்தைகள், புலிகள், கரடிகள் மற்றும் அரிய வகையான சிங்க வால் குரங்கும் வசித்து வருகிறது. தற்போது இந்த உயிரினங்களை கணக்கெடுப்பதற்காக களக்காடு மலையில் உயரமான அடந்த 8 பகுதிகளில் அதிநவீன டிஜிட்டல் கேம்ராக்கள் பொறுத்தி வைக்கப்பட்டன. இதில் களக்காடு செங்கல் தியரி யானை எலும்பு ஓடையில் பொறுத்தப்பட்ட கேமராவில், அரிய வகை விலங்கான சிறுத்தை இனத்தைச்சேர்ந்த காட்டுப்பூனையின் படம் பதிவாகியுள்ளது. மனிதர்களின் கண்களில் சாதாரணமாக இவை தென்படாது. அடர்ந்த காட்டுப்பகுதியில் மட்டுமே வசிக்கும் இந்த பூனைகளின் வால்கள், சிறுத்தைகளைப்போன்று உள்ளன. இந்த அரிய வகை விலங்கு, இங்கே இருப்பது இப்போதுதான் தெரியவருகிறது.

No comments:

Post a Comment