Total Pageviews

Thursday, 22 November 2012

களக்காட்டில் கோவிலுக்குள் புகுந்த கருநாகப் பாம்பு: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

களக்காடு மேலபத்தை ரோட்டில் கற்பகவள்ளியம்மன் கோவில் உள்ளது. நேற்று மாலை இங்கு கருநாகபாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த பக்தர்கள் கோவிலில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியே சென்றனர். இதையடுத்து கோவில் பூசாரி சுரேஷ் களக்காடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை துணை இயக்குனர் சேகர் உத்தரவின்பேரில் வனத்துறை ஊழியர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நவீன உபகரணங்களை பயன்படுத்தி பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை களக்காடு தலையனை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கருநாகப்பாம்புகள் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும். தற்போது பிடிக்கப்பட்டுள்ள கருநாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கோவில் அருகே உள்ள புதரில் பதுங்கியிருந்திருக்கலாம். நேற்று புதரில் இருந்து வெளியேறி கோவிலுக்குள் புகுந்திருக்கலாம் என்றனர்.

No comments:

Post a Comment