Total Pageviews

Saturday, 22 March 2014

களக்காடு வனவிலங்கு சரணாலயம்: திருநெல்வேலி

தமிழ்நாட்டில் உள்ள களக்காடு திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி “களக்காடு” என்று பெயர் பெற்றது. இங்குள்ள வனவிலங்கு சரணாலயம் சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. குற்றாலத்துக்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. இது தமிழகத்தின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும். இக்காப்பகத்தின் வடக்கு,தெற்கு,மேற்கு திசைப்பகுதிகள் வனங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் கிழக்குப் பகுதியில் மட்டும் கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராம வனப்பாதுகாப்பு (Village Forest Protection Committees) குழுக்கள் உருவாக்கப்பட்டு, கட்டுப்பாடான வனமேலாண்மை செயற்படுத்தப்படுகிறது. இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி புள்ளிமான், கடம்பை மான்கள், காட்டுப்பன்றிகள் சிங்கவால் குரங்குகள் மிகுதியாக வாழ்கின்றன.இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் பாபநாசம்ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி நதியும் அதன் சில உப நதிகளும் இந்த சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன. இதில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளைக் காப்பகத்தில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம், கடந்த 1995-ஆம் ஆண்டு உலக வங்கியினால் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக, இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில்(the ‘Best coexistence and buffer zone management’) முக்கிய பணியாற்றியதற்காக, இக்காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் (National Tiger Conservation Authority (NTCA)) சிறந்த விருது கிடைத்துள்ளது. குறிச்சொற்கள் : sathiyam tv, களக்காடு, திருநெல்வேலி, புலிகள் காப்பகம், வனவிலங்கு சரணாலயம்

No comments:

Post a Comment