Total Pageviews
Friday, 23 November 2012
பல் போச்சே ........
தென் தமிழகத்தின் கோடியில் உள்ள பொதிகை மலை பல அதிசியங்களையும் ரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
தென்காசிக்கு அருகில் உள்ள குற்றாலத்திலிருந்து, மணிமுத்தாறு பாபனாசம் மற்றும் காரையாறு அதற்கும் மேலே அகஸ்த்தியர் அருவி மற்றும் பாணதீர்த்தம் போன்ற இடங்கள் இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில் அமைந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம்-வள்ளியூர் பாதையில் அமைந்துள்ளது களக்காடு என்னும் சிற்றூர்.அங்குள்ள மலை அரிய பல மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மலையில் 5கி.மீ. தொலைவில் கற்கண்டாக இனிக்கும் அருவியும் அருகில் பல ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவிலும் உள்ளது.
கோவிலை ஒட்டி ஒரு பெரிய்ய மண்டபமும் உள்ளது. அருவிக்கரை எங்கும் அழகிய பலவண்ண பூச்செடிகளும் கண்களைக் கவரும்.
பெருமாள் கோவிலுக்கு தினமும் அடிவாரத்தில் உள்ள ஊரில் இருந்து ஒரு அர்ச்சகர் காலையில் வந்து பூஜை செய்துவிட்டு திரும்பிவிடுவார். பெருமாள்சிலை சுமார் 6அடி உயரம் கம்பீரமாக இருக்கும்.
மலையில் கரடுமுரடான பாதையை நடந்து தான் கடக்கவேண்டும்.வழி நெடுகிலும் பெரிய பெரிய காட்டு மரங்களும் மரங்களில் அரியவகை சிங்கவால் குரங்குகளும் உள்ளன.
திருமணத்திற்கு முன் என் கணவர் அவர் நண்பர்களுடன் (சுமார் 25 நபர்கள்) மற்றும் சமையல் பொருட்கள் சமையல் காரருடன் வருடம் ஒரு முறை அங்கு வெளிஉலக தொடர்பு ஏதுமின்றி ( 1969-அப்போது கைபேசியும் கிடையாது) மூன்று தினங்களை இயற்கையுடன் ஒன்றி ரம்மியமாக கழித்தும் அருவியில் நீராடி மகிழ்ந்ததையும், ஒரு முறை அவர் நண்பர் ஒருவர்க்கு அருவியில் ஏற்பட்ட அனுபவத்தையும் கூறினார்.
"அருவி, கரையிலிருந்து 15அடி தொலைவில் ஆழமான தடாகத்தில் உள்ளது.அருவிக்கு கீழே அமர்ந்து குளிக்க ஒரு பெரிய பாறை உள்ளது. தண்னீர் பளிங்குபோல் தெளிவாகவும், கற்கண்டு போல் சுவையாகவும் இருக்கும்.
. மண்டபம்,கோவில் எங்கேயும் மின்வசதி கிடையாது. இரவில் " பெட்றமாக்ஸ்" உதவியில் சமையல் நடைபெறும். அனைவரும் மண்டபத்தில் படுத்துக்கொள்ள, இருவர் மட்டும் வெளியில் மரச்சுள்ளிகளை எரியவிட்டு, காட்டுவிலங்குகள் அருகே வராமல் காவல் இருப்பார்கள்.
பாறையில் அமர்ந்து சிலரும் கரையில் சிலரும் அருவித்தண்ணீரில் நீராடிக்கொண்டு இருக்கும் போது ஒரு நண்பர் அருவியில் நீரோடு வந்த சிறிய இலையுடன் கூடிய குச்சியை பல் தேய்க்க வசதியாக உடைத்து, பல் தேய்த்திருக்கிறார். சிறிது நேரம் தேய்த்துவிட்டு குச்சியை அருவியில் வீசிவிட்டு அனைவருடன் அருவியில் குளித்துக்கொண்டிருக்கும்போது, சிறிது நேரம் கழித்து வாய் உணர்ச்சி இல்லாமல் மரத்துவிட்டது போல இருக்கிறது என்று சொல்லி வாய் நிறைய நீரால் கொப்பளிக்கும் போது அத்தனை பற்களும் அருவியில் கொட்டிவிட்டது! அதில் இரண்டு பற்களை ஏற்கனவே எடுக்கவேண்டும் என கூறிக்கொண்டிருந்தார்.அதுவும் சேர்ந்து அருவியோடு போய்விட்டது! அவர் பல் தேய்த்த குச்சியை அருவியில் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை
ஆம்! தென் தமிழகத்தின் பொதிகை மலைத்தொடர் அரிய பலமூலிகைகளையும் அதிசியங்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஜும்மா பயான்-களக்காடு
Thursday, 22 November 2012
களக்காட்டில் கோவிலுக்குள் புகுந்த கருநாகப் பாம்பு: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
களக்காடு மேலபத்தை ரோட்டில் கற்பகவள்ளியம்மன் கோவில் உள்ளது. நேற்று மாலை இங்கு கருநாகபாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த பக்தர்கள் கோவிலில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியே சென்றனர்.
இதையடுத்து கோவில் பூசாரி சுரேஷ் களக்காடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை துணை இயக்குனர் சேகர் உத்தரவின்பேரில் வனத்துறை ஊழியர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் நவீன உபகரணங்களை பயன்படுத்தி பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை களக்காடு தலையனை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கருநாகப்பாம்புகள் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும். தற்போது பிடிக்கப்பட்டுள்ள கருநாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கோவில் அருகே உள்ள புதரில் பதுங்கியிருந்திருக்கலாம். நேற்று புதரில் இருந்து வெளியேறி கோவிலுக்குள் புகுந்திருக்கலாம் என்றனர்.
அலி டிராகன் ரியூ : ALI DRAGON RYU
களக்காடு கிளைக்கு ஹதீஸ் புத்தகங்கள்
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 26. 02. 2011 களக்காடு கிளைக்காக நெல்லை மாவட்டத் தலைவரிடம் கடையநல்லூர் கிளை சார்பாக புகாரி உள்ளிட்ட புத்தகம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
களக்காடு மலையில் காணப்படும் அறிய வகை காட்டுப் பூனை
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு யானைகள், சிறுத்தைகள், புலிகள், கரடிகள் மற்றும் அரிய வகையான சிங்க வால் குரங்கும் வசித்து வருகிறது.
தற்போது இந்த உயிரினங்களை கணக்கெடுப்பதற்காக களக்காடு மலையில் உயரமான அடந்த 8 பகுதிகளில் அதிநவீன டிஜிட்டல் கேம்ராக்கள் பொறுத்தி வைக்கப்பட்டன.
இதில் களக்காடு செங்கல் தியரி யானை எலும்பு ஓடையில் பொறுத்தப்பட்ட கேமராவில், அரிய வகை விலங்கான சிறுத்தை இனத்தைச்சேர்ந்த காட்டுப்பூனையின் படம் பதிவாகியுள்ளது.
மனிதர்களின் கண்களில் சாதாரணமாக இவை தென்படாது.
அடர்ந்த காட்டுப்பகுதியில் மட்டுமே வசிக்கும் இந்த பூனைகளின் வால்கள், சிறுத்தைகளைப்போன்று உள்ளன. இந்த அரிய வகை விலங்கு, இங்கே இருப்பது இப்போதுதான் தெரியவருகிறது.
களக்காடு சிவன் கோவிலுள்ள நெற்களஞ்சியம்
களக்காடு சிவன் கோவிலுள்ள நெற்களஞ்சியம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குநேரி வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் களக்காடு அமைந்துள்ளது. இவ்வூரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கோமதி அம்பாள் சமேத சத்யவாகீஸ்வரர் திருக்கோவிலின் தென்மேற்கு மூலையில் 20 அடி விட்டமும் 22 அடி உயரமும் உள்ள ஓர் கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. இது அரசர்கள் ஆண்ட காலதில் தானியங்களைச் சேமித்து வைக்கக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்கோவில் வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல் கோட்டையாகவும் பயன் படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு அத்தாட்சியாக மதில் சுவரில் வீரர்கள் நின்று போரிட வாய்ப்பாகக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில் கல்வெட்டுகளில் பல மன்னர்கள் கோயிலுக்காக நிலங்களை விட்டுக்கொடுத்து அவற்றிலிருந்து வரும் வருவாயில் செய்ய வேண்டிய செலவுகள் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன. (இக்கல்வெட்டுக்களின் படி இத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது) போர்க்காலங்களிலும் மற்ற உற்பத்தி குறைந்த காலங்களிலும் இக்களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் பயன்பட்டிருக்கலாம். இவ்வளவு பெரிய நெற்களஞ்சியம் களக்காட்டு ஊரின் வளத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
முனைவர் ஆ. தசரதனால் எழுதப்பட்டு "தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம், சென்னை அவர்களால் வெளியிடப்பட்ட பத்மநாபசுவாமி கதைப்பாடல்கள்" என்ற ஆராய்ச்சி நூலில் பக்கம் 130-132ல் பின் வருமாறு எழுதப்பட்டிருக்கிறது.
களந்தை என்பது களக்காடு எனத் தற்போது வழங்கப்படுகிறது. களம் என்றதற்கு ஏற்ப இங்குப் பாண்டியரின் படைவீடு இருந்தது. காடு என்பதற்கு ஏற்ப இந்த ஊர் மலை அடிவார நகராக உள்ளது. வரலாற்றுக் காலத்தில் கரவந்தாபுரம் என்றும் அழைக்கப்பட்டது. பாண்டியன் நெருஞ்சடையானின் கரவந்தாபுரம் வேள்விக்குடி செப்பேடுகள் இங்கிருந்து வெளியிடப்பட்டன. பொதியமலை அடிவாரத்திலிருந்த ஆய்குல வேளை வெல்ல இங்கே பாண்டியன் படைவீடு அமைத்திருந்தான். அருவியூக் கோட்டை என்பதை அப்போது அழித்தான். ஆயை வென்ற பின் இங்கே அரண்மனை ஒன்றை அமைத்தான். இவ்வாறு இச் செப்பேடுகளிலிருந்து தெரிகிறது. இப்பகுததியிலிருந்து வைத்தியருள மாறன்காரி என்பவனே அரசன் பொருட்டு இச்செப்பேட்டை வெளியிட்டான்.
பாண்டியருக்குப் பின் சோழரிடம் இப்பகுதி வந்தது. இங்கிருந்து சோழகுலவல்லியை சேரநாட்டு அரசன் ஒருவன் மணந்து இதைத் தலைநகராக்கி ஆண்டான் எனக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இப்பகுதி அப்போது "வானவன் நாடு" எனப் பெயர் பெற்றது. அதன் தலைநகர் சோழகுலவல்லிபுரம் என அழைக்கப்பட்டது. விசயநகரத்து வேந்தர்களுக்கு உரிய பகுதியாக அது இருந்தது. அச்சுதராயர் இங்கிருந்த ஆலயத்தில் பல திருப்பணிகளைச் செய்தார்.
"களக்கோட்டை" என்றே அப்போது இப்பகுதி அழைக்கப்பட்டதாக மன்னார்கோவில் கல்வெட்டு கூறுகிறது. இங்குள்ள சிவன் கோவிலில் "சீவல்லி மண்டபம்" என்ற பெயரில் சீவலமாற பாண்டியன் கட்டிய அழகான மண்டபம் ஒன்று உள்ளது. இது விசயநகரக் காலத்தியது. அச்சுதராயர் ஆதரவினால் சீவலமாற பாண்டியன் இம்மண்டபத்தைக் கட்டினான். கி.பி.16ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் அமையப் பெற்ற கல்வெட்டுகளிலிருத்து களக்காட்டு நகரில் சத்யவாகீஸ்வரர் ஆலயம் உதய மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பூர்வீக சேர அரசர்கள் இத்திருக்கோவிலில் திருப்பணிகள் செய்திருந்தனர். அதனால் சேரமான் பெருமாள், சுந்தரர், திருமால் ஆகியோருக்கு இங்கே திருவுருவங்கள் உள்ளன.
அச்சுதராயர் மற்றும் சீவலமாறன் தொடர்புள்ள சிறப்புமிக்க இத் திருத்தலத்திற்கே தம்பிரான் வந்தார். இயற்கை எழில் பரவும் சோலைகள் சூழ்ந்த வழியாக அவர் வந்தார். இச்சோலைகள் குடமாடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியை உள்ளடக்கியிருந்த வானவன் நாடு தம்பிரான் வந்த கால கட்டத்தில் மிகச் சிறந்த நாடாக இருந்ததால் அவரால் போற்றப்பட்டது. வானவன் என்பது சேரனுக்குரிய பட்டப்பெயர்.
"ஊரு பல ஆறு விட்டு ஊக்க முள்ள திருமாலும்
சங்கை யுள்ள கேந்திரனும் சல்லிப்பூதம் தன்னுடனே
குங்குமம் சிறந்த பொய்கை குளிர்ந்த மரச்சோலை கண்டு
செங்கை நெடுமா லாவரும் திருந்திப் பொருந்தி மனம்
குடமாடி யென்னு மலை கொற்றவாளர் கண்டருளி
அடைவாகவே யிருந்த அந்த மலைவா ரத்திலே
பூங்கவும் தேன்கமழும் புன்னை மரச்சோ லைகளும்
பாங்கான மங்கையர்கள் பாவை யர்கள் குலவையிட
நீங்காத வாவிகளும் நித்தலரும் பூங்காவும்
கொத்தலரும் செண்பகமும் குளிர் தாமரை வாவிகளும்
இத்தை யெல்லாம் கண்டருளி யின்னாடு நன்னா டெனவே
இவற்றைக் கண்ட தம்பிரான் களந்தைப் பகுதியில் இருக்கும் கறைக்கண்டரையும் கலியுக மெய்யரையும் கண்டதாகப் பாடப் பெற்றுள்ளது.
"களந்தை கறுதரையும் கலியுகத்தில் மெய்யரையும்
வளர்ந்த திருமேனி மாயவரும் மறையவனும்
செங்கோலின் முறை நடக்கும் திருக்களந்தை தன்னைவிட்டு
நங்கைபல மாது புயன் நாயனார் சேரியில் வந்தார்"
களந்தைப்பகுதியில் கண்டறுங்கறுத்தவர் இருந்த மண்டபம், சந்நிதி மற்றும் செங்கோலின் சிறப்பு ஆகியவற்றை தம்பிரான் கண்டார். அவர் மேலும் அப்பகுதியிலிருந்த ஆட்சி சிறந்த ஆட்சியாகவும் அமைந்திருந்ததையும் கண்டார்.இதிலிருந்து களக்காடு மிகவும் செழுமை பொருந்திய இடமாக இருந்தது என்பதை அறியலாம்.
பல களம் கண்ட காடு களக்காடு
(கீழ்க்கண்ட தகவல்கள் முனைவர் ந.இராசையாவால் எழுதப்பட்டு, பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரத்தால் தொகுக்கப்பட்டு, காவ்யா பதிப்பகம், சென்னை-24 அவர்களால் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டது)
1) பூலித்தேவன் கும்பினியாரை எதிர்த்து நடத்திய போர்கள் (பக் 67)
1755ம் ஆண்டு சூலையில், ஆற்காட்டு நவாபின் சகோதரனான மாபூசுகான் பெரும்படையுடன் வந்து களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினான். இதனை அறிந்த பூலித்தேவன், திருவிதாங்கூர் படைகளையும், மதுரையில் இருந்து வந்த முடோமியா என்னும் பட்டாணியனின் படைகளையும் சேர்த்துக் கொண்டு மாபூசுகானுடன் போரிட்டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினான் பூலித்தேவன். (Country correspondence, 1755,Letter 132, P 53)
இப்போரானது, ஹெரான் பூலித்தேவனிடம் தோல்வியடைந்து சென்ற இரண்டு மாதத்திற்குள் நடந்ததாகும். இக் களக்காடு கோட்டை, திருவனந்தபுரம் பழைய அரண்மனை இருக்கும் பத்மநாபபுரத்தின் அருகாண்மையில் உள்ளது. களக்காட்டுப் போரிலிருந்து தொடர்ந்து கும்பினியாரை எதிர்த்துப் பலபோர்களைப் பூலித்தேவன் நடத்தியுள்ளான். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது இன்றியமையாததாகும்.
2) மாவீரன் பூலித்தேவன் கூட்டணி (பக் 145)
கும்பினியாரும் ஆற்காட்டு நவாப்பும் சேர்ந்து கெடுபிடி வசூலில் இறங்கினர். இதை எதிர்க்கத் தமிழ்ப் பாளையக்காரர்கள் ஓரணியில் சேர்ந்து, புரட்சித் தளங்களைப் பலம் பொருந்தியதாக அமைக்கவும் திட்டம் தீட்டினான் பூலித்தேவன். ஏற்கனவேயுள்ள நெற்கட்டான் செவ்வல் கோட்டையைப் பலப்படுத்தினான். கெரனால் பலமுறை பீரங்கியைக் கொண்டு தாக்கியும் ஒன்றும் செய்ய முடியாமல் திருப்பிப் போகச் செய்தது நெற்கட்டான் செவ்வல் கோட்டை. பனையூரில் ஓர் கோட்டையைக் கட்டினான். இக்கோட்டை சிறிய அளவில் இருந்தது. வாசுதேவநல்லூர் கோட்டையை வலுவானதாகச் செய்தான். அண்டைய பாளையமான கொல்லங்கொண்டான், ஊத்துமலை ஆகிய பாளையங்களின் கோட்டையைக் கட்டும்படி செய்தான். களக்காட்டிலும் ஒரு கோட்டையைக் கட்டினான். இந்தக் கோட்டைகளுக்குப் பாண்டியர்களின் பெயர்களைச் சூட்டினான். வீரபாண்டியன் கோட்டை திருவனந்தபுரம் எல்லைப்பகுதியின் அருகிலுள்ளது களக்காடு கோட்டையாகும். இவ்வூரைக் கைக்கொள்ளும் பொருட்டு சேர, பாண்டியர்களிடையே அடிக்கடி அங்கு போர் நடந்ததால் களக்காடு எனப் பெயர் ஏற்பட்டது. களம் + காடு = களக்காடு என்று பெயர் ஏற்பட்டது. இதன் பழைய பெயர் சோழகுல வல்லிபுரம் என்பதாகும். இதனை காமன், உதயன், சுந்தரன், கோதை ஆகிய சேர அரசர்கள் கொல்லம் ஆண்டு 420 முதல் (1245) ஆண்டு வந்தனர். மலைச்சாரலின் கண் அமைந்துள்ளதால் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள இயற்கைச் சாதனங்களும் இருந்தன. இங்கு மாவீரன் பூலித்தேவன் வீரபாண்டியன் கோட்டை என்னும் பெயரில் ஒரு கோட்டையக் கட்டினான். இக்கோட்டையைப் பற்றி துர்க்காதாஸ்சாமி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (ஸ்வாம,¢ துர்க்காதாஸ், எஸ்.கே, தமிழ்மறவன் பூலித்தேவன், தேனருவி வெளியீடு, தி.நகர், சென்னை - 17. 1958 பக் 41)
(பக் 149)
இந்நிலையில் மாவீரன் புலித்தேவனின் கூட்டணியை வலுப்படுத்த, களக்காட்டுக் பகுதியை திருவனந்தபுரம் மன்னன் மார்த்தாண்ட வர்மனுக்கு விற்றுவிட்டான் முடோமியா. ஆர்க்காட்டு நவாபின் திருச்சி பிரதிநிதியாகவும், அதிகாரியாகவும் இருந்ததால் களக்காட்டுப் பகுதியை விற்கும் அதிகாரம் முடோமியாவிடம் இருந்தது. (பக் 151) களக்காட்டுக் கோட்டையை விலைக்கு வாங்கிய மார்த்தாண்ட வர்மன் 2000 போர் வீரர்களைக் கொண்ட படையை அங்கு நிறுத்தி வைத்திருந்தான். 1755ல் மாபூசுகான் திடீரென்று தாக்கி களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினான். பின்னர் மாபூசுக்கான் மதுரைக்குச் சென்று விட்டதை அறிந்த முடோமியாவும், மாவீரன் பூலித்தேவனும், திருவாங்கூர் மார்த்தாண்டனும் சேர்ந்து களக்காட்டுக் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். இதனை அறிந்த மாபூசுகான் 600 குதிரைப்படைகளுடனும், ஆயிரம் சிப்பாய்களுடனும், திருநெல்வேலியிலிருந்த ஏனைய படைகளுடன் களக்காட்டைத் தாக்கினான்.
மாவீரன் பூலித்தேவனின் புரட்சிப் படையும், திருவாங்கூர் மார்த்தாண்டனின் படைகளும் சேர்ந்து மாபூசுகான் படையை எதிர்த்தன. மாவீரன் பூலித்தேவனின் வீரத்திற்கு முன்னால் மாபூசுகானின் படைகள் எதிர்த்து நிற்க முடியாமல் தங்கள் ஆயுதங்களையும் போட்டு விட்டு ஓடினர். மாவீரன் பூலித்தேவன் வெற்றி பெற்றான். இதைப்போன்ற பல செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
களக்காட்டுக் கோவிலில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை.
களக்காட்டுச் சிவன் கோவில் கோட்டையாகப் பயன் படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு அத்தாட்சியாக, சிவன் கோவிலில் இருந்து மேற்கே வீரமார்த்தாண்ட விநாயகர் கோயிலுக்கும், கிழக்கே நினைத்ததை முடித்த விநாயகர் கோயிலுக்கும் இடையே சுரங்கப்பாதைகள் இருந்தன் என்பதற்கு அத்தாட்சியாக சில அடையாளங்கள் இக்கோயில்களில் காணப்படுகின்றன. இங்கிருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கும், சேரன்மகாதேவி சிவன்கோவிலுக்கும் இடையே சுரங்கப்பாதைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அடையாளங்கள் காணப்படவில்லை.
மேற்கண்டவற்றிலிருந்து, சாதாரண காலங்களிலும், உணவு தட்டுப்பட்டுக்காலங்களில் வழங்குவதற்காகவும், போர்க்காலங்களிலும் இந்த தானிய சேமிப்புக் கட்டிடம் பயன் பட்டிருக்கலாம் என உறுதியாகத் தெரிகிறது.
Tuesday, 20 November 2012
என் ஊர்: களக்காடு – நடிகர் விதார்த்
சந்தன வீதி!
”திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது களக்காடு. அது என் தாயின் ஊர். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊர். எங்கள் ஊரைச் சுற்றி செங்கல்தேரி, கருங்கல்கசம் என்ற நீர்வீழ்ச்சிகளும், மலைப் பகுதி களும் உண்டு. முன்னொரு காலத்தில் ‘களப்பிரர்கள்’ என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு இருந்தபடி தமிழகத்தினை ஆட்சி செய்து வந்ததால் களக்காடு என்று பெயர் வந்ததாகக் கூறுவார்கள்” தன் தாயின் ஊரான களக்காடு பற்றிப் பேசும்போதே, நடிகர் விதார்த்தின் குரலில் சந்தோஷம் வந்து ஒட்டிக் கொள்கிறது.
”எங்கள் ஊரின் அடையாளமே கோயில்கள்தான். அதுவும் சத்தியவாகீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. வைகாசி மாதம் இந்தக் கோயில் தேர்த் திருவிழாவை ஊரே கொண்டாடும். 10 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில், கலை நிகழ்ச்சிகள், கூத்து, நாடகம் எனக் களைகட்டும். ஆடிப்பெருக்கு அன்று இந்த ஊரில் ஒரு வினோதமான திருவிழா நடைபெறும். ஊர் மக்கள் அனைவரும் ஆற்றுக்கு வந்து வழிபடுவோம். வீட்டில் இருந்து ஏதாவது ஓர் உணவுப் பண்டத்தைத் தயாரித்துக்கொண்டு செல்வோம். பெரும்பாலான மக்கள் அதிகமாக தோசைதான் எடுத்துவருவார்கள்.
இந்தத் தோசையை ஆற்று நீரில் நனைத்து அதைச் சாப்பிடுவோம். இந்தத் திருவிழா மிக சுவாரஸ்யமாக இருக்கும். இந்த ஊரின் பிரசித்தி பெற்ற உணவுப் பண்டம் அடைதான். அந்த அடையுடன் வெல்லத்தைச் சேர்ந்து எள்ளுப்பொடி தொட்டுச் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். எங்கள் ஊரில் வீடுகள் அமைந்து இருக்கும் கட்டமைப்பு மற்றொரு அழகு. முன்பு எங்கள் பகுதியில் எந்த வீட்டுக்கும் காம்பவுண்ட் சுவர் கிடையாது. ஒரு வீட்டு மாடியில் இருந்து அந்தத் தெருவின் முடிவில் இருக்கும் வீடுவரை மாடி மேலேயே நடந்து கடந்து செல்ல முடியும். சிறு வயதில் நாங்கள் மொட்டை மாடி களில்தான் ஓடிப் பிடித்து விளை யாடுவோம். அவ்வளவு நேர்த்தி யாகவும், அழகாகவும், வீட்டுக் கட்டமைப்புகள் இருக்கும். அதே போல வீட்டின் மாடியில் இருந்து பார்த்தால் அருகில் உள்ள நீர் வீழ்ச்சி அழகாகத் தெரியும். ஒவ்வொரு வீட்டிலும் முன்புறம் திண்ணை இருக்கும். மாலை நேரங்களில் அதில் அமர்ந்துதான் பொழுதைப் போக்குவோம். சுற்றுப் புறம் முழுவதும் மலைகளும், நீர்வீழ்ச்சியும் உள்ளதால் குளிர்ந்த மலைக்காற்று ஊரையே குளிர்ச்சிப் படுத்தும். இந்த இயற்கைக் காற்றுக்கு எத்தனை ஏ.சி. வைத்தாலும் ஈடாகாது. வெயில் காலத்தில் ஊரில் உள்ள சிறுவர்கள் எல்லோரும் வெப்பத்தைக் குறைக்க உடல் முழுவதும் சந்தனத்தைப் பூசிக்கொள்வோம். மாலை நேரமானால் சிறுவர்கள் எல்லாரும் சட்டை இல்லாமல் சந்தனத்தோடுதான் வீதிகளில் விளையாடுவோம். அப்போது தெருவே கமகமக்கும்.
என் மாமா கோயில் அர்ச்சகராக இருந்த தால், தேங்காய், பழம், வாழைப் பழங்கள் கொண்டுவருவார். அதைச் சாப்பிட ஊரில் உள்ள குரங்குகள் அனைத்தும் தவறாமல் எங் கள் வீட்டில் ஆஜராகும். குரங்குகள்தான் என் பால்ய கால நண்பர்கள். எங்கள் ஊரில் தண் ணீர்ப் பஞ்சமே ஏற்பட்டது இல்லை. ஊரின் ஆற்று நீர் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால், இன்று அந்த ஆறு வற்றிவிட்டது.
ஊரில் உள்ள பாக்யலட்சுமி, மீரா தியேட்டர்கள்தான் என்னைப் போன்ற சினிமா ரசிகர்களுக்கு சொர்க்கம். எனக்கு சிறு வயதிலேயே சினிமா மீது ஆர்வம் உண்டு. நண்பர்களுடன் வாரக் கடைசியில் சென்று படம் பார்ப்பேன். அப்போது தரை டிக் கெட் வெறும் 50 பைசா. எங்கள் ஊரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தெலுங்குப் படங்களை அதிகமாகத் திரை இடுவார்கள். 5 காசுக்கு இரண்டு மிட்டாய் தருவார்கள். படம் முடியும்வரை அந்த மிட்டாயைச் சப்பிக்கொண்டே இருப் போம்.
டைரக்டர் விசு எங்கள் ஊரைச் சேர்ந்தவர்தான். ஒவ்வொரு முறை அவரின் வீட்டைக் கடந்து போகும்போதும், ‘நானும் ஒருநாள் நடிகன் ஆவேன்’ என்று நினைத்துக்கொள்வேன். அப்படி என்னுள் என் கனவை விதைத்தது, வளர்த்தது எல்லாமே என் ஊர்தான்!”
- ரா.அண்ணாமலை
படங்கள்: எல்.ராஜேந்திரன்

Masque at river side of Kalakad
Photo : Masque at river side of Kalakad
Photo : Masque at river side of Kalakad. This picture is taken in the destination of Kalakkad in the state of Tamil Nadu in the country of India. You can also add your photos to this gallery via the links below. Click here to see more photos of Kalakkad, IndiaAbout our village Kalakadu!
The ancient village with a rich heritage
Kalakad is a small, beautiful, agriculturally fertile village,
situated at the foothills of western Ghats, away from all hustle and
bustle of highways or cities. Not much of its old history is known. It
has been under the rule of Pandyas, Nayakas, Nawabs, Trvancore kings and
lastly the British. It was an attractive possession for all these
rulers because of it fertile lands. Even now agriculture is the main and
only industry. Certain areas of the village are known as “Kottai” a
Tamil name for fort, though no fort is seen now, except for very minimum
traces of a fort wall along the river edge near the new bus stand.
Kalakad forest, almost an extension of the silent valley of Kerala, is an evergreen forest, home for the lion tailed monkeys: It is a declared Tiger reserve. Many of the rivers in Tirunelveli district originate here. A small dam on Pachaiyar river constructed recently has water almost throughout the year even when other places run dry! On top of the mountain at a height of about 3000 feet an old bungalow is there, constructed and frequented by the British during hot summer months, as plenty of water was always there with a very nice climate. Even now one can go there, but with permission from forest authorities in Tirunelveli. Though a very very narrow motorable road had been laid some time back, it is in a very bad shape and only a very skilled driver on a good vehicle can navigate through it. While driving, the vehicle will almost never see sunlight as tall trees on both the sides cover the road. Many falls, such as “Thaengai Uruli, Thalaianai, Karungal kasam, Netteringal, Sengaltheri” are situated in these forests.

Ancient Temple of Kalakadu
with Lord Satyawageeswarar and Gomathi Ambal
There is a big and ancient temple with Lord Satyawageeswarar and
Gomathi Ambal as presiding deities. One can see and listen to music from
the stone pillars in this temple at the main mandapam at the entrance
to sannidhi of Sri Sathyawageeswarar. The Rajagopuram of this temple has
9 tiers. After a lot of gap between the last known Kumbabishekam
performed in 1935, recently in 2000 Kumbabishekam was carried out for
all the sannidhis: However the Rajagopuram was left out due to paucity
of funds at that time.
Many people within Kalakad and outside, joined together and formed an association in 2008, named Bakthar Peravai to take up this work. After toiling for 3 long years, they saw the fruit of their work, and the Kumbabishekam was performed on 14th july 2011 in a grand scale, not scene before in the history of Kalakad.

Schools in Kalakadu
One of the schools was established in the year 1911 in memory of
the coronation of king Edward Seventh, known shortly as ECM higher
elementary school, though it is being run now as a high school for
girls, by KunDrakkudi Adheenam. There is a Govt high school, K.A.M.P
Meerania High school, and another private English medium high school:
Two more high schools are situated in surrounding villages. However
there is no higher education facility in Kalakad.
Records indicate that U.Ve. Saminatha Iyer visited this place and he was lucky enough to get a full copy of ‘ Pathu Pattu’ that he was searching. A great carnatic musician, Kalakad Rammanarayana Bhagawathar was born here. As early as in the sixties, an outsider, a veterinary doctor from of SankaranKoil remarked, “I find almost in every house of the main streets, minimum one graduate, either a male or a female!”. And Sankarankoil is a much bigger place than Kalakad!
A carnatic musical genius was born in Kalakad who was also honoured as a KALAIMAMANI. He is Late Sri. Ramanarayana iyer who was a well known singer and asthana vidwan of Sringeri Sarada peedam.
As is the case with almost all the villages in India, the natives of Kalakad are slowly leaving Kalakad and settling throughout the world, looking for greener pastures. The river that was existing till a few years back is not at all visible now as it is fully covered by bushes now and it serves only a sewage water drainage stream. The challenge that Kalakad faces now is to come out of all such issues and regain its past glory, and offer a happy, contended living for its residents and a place worth visiting many times for all others.

Subscribe to:
Posts (Atom)