Total Pageviews
Monday, 3 December 2012
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
களக்காடு, டிச. 19:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற்றில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். கடந்த மாதம் பெய்த கனமழை யால் தலையணை பச்சையாற்றில் வெள்ளம் பாய்ந்தோடியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் தலையணை செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து மலைப்பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்ததால் ஒரு வாரமாக வெள்ளம் தணியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந் தது.
கடந்த வாரம் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே கடந்த இரு நாட்களாக செங்கல்தேரி, குளிராட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைதொடர்ந்து தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
விடுமுறை தினமான நேற்று வெளியூர் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் ஏராளமா னோர் தலையணைக்கு வந்தனர். அவர்கள் பச்சையாற்றில் உற்சாகமாக குளித்தனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல கருங்கல்கசம், கோழிக்கால், நெட்டேரியங்கால், குளிராட்டி, செங்கல்தேரி பகுதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் களக் காடு ஊர்பகுதியில் மழை பெய்யவில்லை.
சுற்றுலா பயணிகள் உற்சாகம்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)